தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வானது இன்று(7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகள்
இந்த நிலையில், தமிழகத்தின் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்காக, விழிப்புரம், விருதுநகர், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 729 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடுகள் சுமார் 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியாவில் சிறைத்தண்டனையின் பின்னரான நாடுகடத்தலை தடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.