தனுஷின் குபேரா படம் கடந்த மாதம் வெளிவந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்தது.
இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 23 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், தெலுங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த வெற்றியை தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் கொண்டாடினார்.
இந்த நிலையில், குபேரா திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த இப்படம் 13 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த 13 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 134 கோடி வசூல் செய்துள்ளது.








