ஈரானுக்கு மற்றுமோர் பேரிழப்பு!

கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய (israel)தாக்குதலில் படுகாயமடைந்த ஈரானின்(iran) முக்கிய இராணுவ தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷட்மானி என்பவரே உயிரிழந்தவராவார்.

போர்நிறுத்தத்திற்கு பின்னரான தாக்குதல்
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான்- இஸ்ரேல் நாடுகளிடையே போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

எனினும் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தமது நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகவும் அதற்கு பதிலடி நடவடிக்கையை கொடுப்போம் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரானின் ராடர் வலையமைப்பு மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதலிலேயே குறித்த இராணுவ தளபதி படுகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.