உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உயர்தரம் கற்கும் 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் ஊரில் உள்ள விகாரையில் எசல பௌர்ணமி தினத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் தோரணம் வேலைகளை செய்வதற்காக சென்று, வேலைகள் நிறைவடைந்த பின்னர் தனது நண்பர்களுடன் உடகன்கந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
இதன்போது, திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.