வரலாற்றுப் புகழ்பெற்ற ருஹுணு கதிர்காம எசல மகா பெரஹரா இன்று (26) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் பெரஹரா நிகழ்வுகள் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, நீர் வெட்டு விழா ஜூலை மாதம் 11ஆம் திகதி நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை பேணுவதற்காக சுமார் 1,050 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதேவேளை , யால வனவிலங்கு சரணாலயத்தைக் கடந்து கால்நடையாக புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பை கருதி, முப்படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.