CCTVயால் மாட்டிக் கொண்ட திருடர்கள்!

வவுனியா கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள நேற்றிரவு (25) வீடொன்றில் புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

திருட்டு இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஓமந்தை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.