இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சியை ஆதரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் கோம் மாகாணத்தில் , இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் -ஈரான் போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளின் போர் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.