மட்டக்களப்பு(batticaloa) வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள திக்கோடை சந்தியில் மதகு ஒன்றிற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (28) காலை மீட்கப்பட்டதுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சடலமாக மீட்பு
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சம்பவதினமான இன்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







