இந்த ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கை துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்களாம்

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணமும் அந்த ராசியை ஆளும் அதிபதிகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் மாத்திரம் கடந்த கால வலிகளை நினைத்து வறுத்தப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவருக்கு ஒருவர் துரோகம் செய்து விட்டால் அவர்களை எக்காரணம் கொண்டும் அவர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

அதனை மறந்து விட்டு அடுத்த வேலைகளை பார்த்தாலும் குறித்த நபரை பார்க்கும் பொழுது அது அவர்களுக்கு ஞாபகம் வரும்.

இப்படிப்பட்ட குணம் ஒரு ஆசீர்வாதமாகவும், சாபமாகவும் இருக்கலாம். எப்படியெனில், இது அவர்களின் வலுவான நினைவாற்றலும் காரணமாக இருக்கலாம்.

அந்த வகையில் துரோகிகளை மன்னிக்காத ராசியில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். ‘

1. ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதக்காரர்கள் மற்றும் உறுதியானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு யாராவது துரோகம் செய்தால் அவர்களை ஒரு காலமும் மன்னிக்க மாட்டார்கள். நீண்ட காலம் வெறுப்புணர்வுடன் இருப்பார்கள். இவர்களிடம் விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் இருந்தால் அவர்களையும் மதிப்பார்கள். இவர்களிடம் ஒருமுறை நம்பிக்கையை உடைக்கும் படி நடந்து விட்டால் அவர்கள் அதனை ஆயுட் காலம் முடியும் வரை நினைவில் கொண்டிருப்பார்கள்.

2. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையையும், பெருமையையும் கொண்டவர்களாக இருப்பார்கள். துரோகம், காயம் இவை இரண்டையும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இவர்களின் ஈகோ மன்னிப்பதையும், மறப்பதையும் கடினமாக்குகிறது. இவர்களின் வெறுப்புகள் நீண்ட காலமாக இருக்கும். இதனால் இவர்களின் நம்பிக்கையை பெறுவது என்பது சாதாரண விடயமாக இருக்காது.

3. மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் லட்சியவாதிகள் மற்றும் நடைமுறை சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். விசுவாசமும், நம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் மனிதர்களை அவர்கள் மதிப்பார்கள். ஒருவர் துரோகம் செய்து விட்டால் மிகுந்த கோபம் கொள்வார்கள். அவர்கள் மீது நீண்ட காலம் வெறுப்புக்களை வைத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் வலுவான பொறுப்பு மற்றும் கடமை உணர்வு தான் இவர்களை மன்னிக்கவும், மறக்கவும் விடுவதில்லை. மேலும் இவர்களின் வெறுப்புகள் தீவிரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இதனால் இவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினமாகும்.