சக்தியிடம் பொறுப்பை கையளிக்கும் குணசேகரன்!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் சக்தியிடம் பொறுப்பை மாற்றியுள்ள நிலையில், கதிருக்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

ஆனால் அப்பொழுது அடங்கியிருந்த வீட்டு பெண்கள் தற்போது வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளனர். சிறையிலிருந்து குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், பெண்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அண்ணனுடன் அனைத்து ஆண்களும் ஆதரவாக இருக்கும் நிலையில் பெண்களின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியே வந்த பெண்கள் தங்குவதற்கு இடம் இல்லாததால் லாட்ஜ் ஒன்றில் அறை எடுக்க கேட்டுள்ளனர். இதற்கு லாட்ஜ் உரிமையாளர் தவறான கண்ணோட்டத்தில் இவர்களை கேள்வி எழுப்பியுள்ளார்.