பிறவியிலேயே கோடீஸ்வரர்களாக இருக்கும் இராசிக்காரர்கள் இவர்கள் தனமா

உலகில் பணம் சம்பாதிப்பது மிக கடினம். ஆனால் அந்த பணத்தை செலவு செய்வது இலகுவான விடயம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் பணத்தை சேமித்து வைப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவர்களே இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை சேமித்து வைப்பத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தால் அடுத்து வரும் சந்ததியினருக்கும் பணத்தை சேமித்து வைப்பார்களாம்.

எதிர்காலத்தில் பண அதிர்ஷ்டத்தால் குதூகலிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

ராசிபலன்கள்

மகரம்
பணம் விஷயத்தில் மகர ராசியில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய எதிர்கால திட்டங்கள் மற்றவர்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும். இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானதாக இருக்கும். தேவையில்லாத விடயங்களுக்கு பணத்தை செலவிட மாட்டார்கள்.

விருச்சிகம்

விருட்சக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாகவே முதலீடுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் லாபம் தரும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கோடிகளில் புரளும் வாய்ப்பு கொண்ட இவர்களை காண்பது அரிது.

ரிஷபம்

ஜோதிட ரீதியாக ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் பணம் ரீதியாக அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் புத்திசாலிகளாக இருக்கும் இவர்களிடம் பணத்தை கரப்பது கடினம். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதால் இவர்களிடம் பணம் இருந்து கொண்டே இருக்கும். சேமிக்கும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.