சரிகமபவில் பாடகி சுசிலாவை கண்முன் நிறுத்திய போட்டியாளர்

சரிகமபவில் இந்த வாரம் Performance Round நடைபெற உள்ளது. இதில்போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை காட்டி வருகின்றனர்.

எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்படி தான் கடந்த வாரமும் இரண்டு போட்டியாளர்களான தர்ஷினி லோஹேந்திரன் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது போட்டியாளர் யோகஸ்ரீ பாடகி சுசிலாவின் பாடலை மிகவும் உணவுர்வுபூர்வமாக பாடியுள்ளார். இதற்கான காணொளி தற்போது வெளியாகிய நிலையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

மற்றவர்கள் யாராலும் அவ்வளவு எளிதில் பாட முடியாத பாடலை யோகஸ்ரீ பாடியுள்ளதால் நடுவர்கள் அவரை மேடைக்கு சென்று கட்டியணைத்து பாராட்டு தெரிவிக்கின்றனர்.