சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகளை கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இதில், தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சவுக்கு சங்கர், நீதிபதிகள், போலீஸ், பத்திரிகையாளர்கள் பற்றி அவதுாறு பேசுகிறார். அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினார். விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது. இந்த குறிப்பிட்ட வழக்குகள், இது தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் பேசக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனையை சங்கர் மீறும் பட்சத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.