மேஷம்
புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டா கும். பணியாளர்களின் ஒத்து ழைப்பு நன்றாக இருக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
கடகம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு பிள்ளை களால் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.
கன்னி
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
தனுசு
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அவர்களால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத் தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.
மகரம்
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்குக் குடும்ப விஷயமாக திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.
கும்பம்
மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல் படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும்.
மீனம்
தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் நிர்வாகத்தினரின் பாராட்டுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.