தப்பி ஓடிய பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி மீட்பு

T-56 ரக துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய கான்ஸ்டபிளின் துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் படோவிட்ட – ஹலுதாகொட பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் டுபாய் நோக்கித் தப்பிச் செல்ல உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதானவரை ஒரு வாரக் காலம் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.