தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில், பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ‘க்ளாஷ்’ குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லரும் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. 2 படங்களை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் ‘டிராகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், “தனுஷூடன் போட்டியா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “போட்டி எல்லாம் இல்லை. அந்த மாதிரி தேதிகள் அமைந்து விட்டன.






