அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 நடிகர்கள்

அண்ணா சீரியல், ஜீ தமிழின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

விஜய் டிவியில் நிறைய ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சன் டிவி சீரியல் மூலம் பிரபலமான நித்யா ராம் நாயகியாக நடிக்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரை துர்கா சரவணன் இயக்க 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

குடும்பம், பாசம், சொந்தம் என பல விஷயங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தற்போது 2 நடிகர்கள் என்ட்ரி கொடுக்க உள்ளார்கள்.

அஜய் மற்றும் விஜய் டிவியில் செந்தூரப்பூவே தொடரில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி இருவரும் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்களாம்.