பல மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குடன் மூவர் கைது!

நிலாவெளி பகுதியில் நேற்று (10) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், 45 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நான்கு வலம்புரிகளுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத்திணைக்கள இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தென்னகோன் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.