நடிகர் காளி வெங்கட் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

நடிகர் காளி வெங்கட் வீட்டில் துயரம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் காளி வெங்கட்.

ரஜினிகாந்த், விஜய், கமல், அஜித் என தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் காளி வெங்கட் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் மட்டும் எட்டு படங்களில் நடித்துள்ளார். அவற்றில் அட்லி தயாரித்த ’பேபி ஜான்’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் காளி வெங்கட் வீட்டில் துயரம்
இந்த நிலையில், நடிகர் காளி வெங்கட் வீட்டில் நிகழ்ந்த துயரம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் காளி வெங்கட்டின் தாயார் விஜயலட்சுமி காலமானார்.

இந்த செய்தி கேட்டு பலரும் நடிகர் காளி வெங்கட்டிடம் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

72 வயதாகும் அவருடைய தாயார் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த செய்தி அறிந்து, காளி வெங்கட் தாயார் மறைவுக்கு ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.