உணவுகளில் கூடுதல் சுவை சேர்ப்பது முதல் பிரியாணிக்கு ரைத்தா தயாரிப்பது வரை அனைத்து வேலைகளுக்கும் தயிர் பயன்படுத்தப்படுகிறது.
தயிர் இல்லாத ஒரு விருந்தை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் கடைசியில் தயிருடன் முடிவதை தான் பலரும் விரும்புவார்கள்.
தயிர் பெரும்பாலான உணவு வகைகளின் ஒரு முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது. துரதிஷ்டவசமாக சில சமயங்களில் குளிர்சாதன பெட்டியில் பல நாட்கள் தயிரை சேமித்து வைத்துவிட்டு மறந்து விடுவோம்.
அப்படியான சமயங்களில் தயிரை கொண்டு முகத்திற்கு பயன்படுத்தலாம். இது முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதுடன், பொலிவாக வைத்து கொள்வது அவசியம்.
அந்த வகையில், தயிரை பயன்படுத்தி எப்படி முக அழகை இரட்டிப்பாக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பழைய தயிரை பயன்படுத்துவது எப்படி?
1. பழைய தயிருடன் சர்க்கரை, தேன் மற்றும் ஓட்ஸ் ஆகிய பொருட்களை கலந்து முகத்தில் தடவலாம். இது இறந்த சரும செல்களை அகற்றி முகத்திற்கு புது பொலிவு தருகிறது. தேவையற்ற அழுக்குகளை நீக்கவும் இந்த ஸ்கரப் உதவியாக இருக்கிறது.
2. இரண்டு முதல் மூன்று நாள் பழமையான தயிரை புதிய தயிரைத் தயாரிக்க பயன்படுத்தலாம். இந்த பழைய ஏராளமான பாக்டீரியாக்கள் இருப்பதால் வெதுவெதுப்பான பாலுடன் கலந்து விட வேண்டும். இப்படி செய்தால் புதிய தயிர் கிடைக்கும்.
3. பழைய தயிரை ஹேர் மாஸ்க்காகவும் தயாரிக்கலாம். தயிருடன் ஒரு மசித்த வாழைப்பழம், தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை சேர்த்து, நன்கு கலந்து, உலர்ந்த கூந்தலில் தடவவும். சுமாராக 20-30 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட்டு பின்னர் ஷாம்போ பயன்படுத்தி அலச வேண்டும். இது தலைமுடியை நன்றாக வளர வைக்கும்.







