நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்கின்றார் என்ற தகவல் இணையத்தில் வெளியான நிலையில், இதற்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வந்தார். முன்னணி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, உச்சத்தில் இருந்தார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியதுடன், நடிப்பதையும் நிறுத்தியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தற்போது இவர்கள் குடும்பத்தில் சண்டை ஏற்படுவதாகவும், கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து ரம்பா பேசுகையில், நான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் பொய் என்றும், ஏன் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்பது தெரியவில்லை. இது மனவருத்தத்தை ஏற்டுபத்துகின்றது. எங்களைப் பற்றி சிந்திக்காமல் இவ்வாறு பொய்யான தகவலை பரப்புவது கஷ்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கணவன் மனைவி என்றாலே இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வராமல் இருக்காது. எங்களுக்கு இடையே சிறுசிறு பிரச்சனைகள் வருவது சாதாரணம் தான். குழந்தைகள் முடியும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அதாவது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் அமெரிக்கா செல்லலாம் எனக் கூறியதாகவும், ரம்பா இந்தியா செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளதால் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகின்றது.
நடிகை ரம்பா திருமணத்திற்கு பின்பு கணவரின் தொழிலை சில ஆண்டுகள் கவனித்து வந்த நிலையில், பின்பு குழந்தைகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 7 வயது வரை அவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு மிகவும் முக்கியம். அதனை தான் கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் ரம்பா கூறியுள்ளார்.