நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்ப பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் ராஜபாலன் பிரகாஸ்பதி ஏற்பாட்டில், இன்று (24.09.2024) பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து, மாவிட்டபுரம் சந்தியில் கட்சியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன