உலகம் முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்றுநோயும் ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
குடும்பத்தில் ஏற்கனவே யாரேனும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது, உடல் பருமன், மது அருந்துவது, ரேடியேஷன் வெளிப்பாடு உள்ளிட்டவை மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.
இருந்தாலும் இதை தவிர மார்பகப் புற்றுநோய் ஒரு சில குறிப்பிட்ட காரணங்களால் வரும் சாத்தியமும் இருக்கிறது. பெண்களுக்கு எந்தெந்த காரணங்களால் மார்பக புற்றுநோய் வருகிறது என்பதை பற்றிய முழு விவரங்களையும் அதற்கான அறிகுறிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மார்பக புற்றுநோயின் காரணங்கள்
பெண்களுக்கு மார்பகத்தில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்கள் ஃபீமேல் ஹார்மோனான ஈஸ்ட்ரஜனுக்கு தொடர்ந்து வெளிப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுடைய கருமுட்டைகள் ப்ரோஜஸ்டிரான் உருவாக்கும்.
எனவே இவை இரண்டுமே மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.இதில், ஒரு சில மரபணுக்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
BRCA1 அல்லது BRCA2 என்ற பிறழ்ந்த மரபணுக்கள் இருந்தால், புற்றுநோய் அபாயம் அதிகம். பொதுவாக பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் கூட, ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் ஆகும் போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
சிகிச்சைக்காக ரேடியேஷன் தெரபி பெற்றிருந்தால், மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.பெண்களுக்கு அதிக டென்சிட்டி இருக்கும் மார்பக திசுக்களில் அதிகமானவில் கிளாண்டுகள் மற்றும் குறைவான கொழுப்பு இருக்கும்.
இத்தகைய பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். நோய் தொற்க்களால் ஏற்படும் மார்பக சீழ் அல்லது சீழ் பாக்கெட்டுகள் இந்த நோய்க்கு காரணமாக இருக்கும்.
இது தவிர எமது வாழ்க்கை பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த நோய் வரும். வயது வித்தியாசத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் இந்த நோய் வரலாம். இது பெரியளவில் பாதிப்பு இல்லை ஆனால் ஒரு சிலருக்கு இது பாதிப்பாகலாம்.
இது தவிர பரம்பரை வழியாக, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு வரும். இது உடல் பருமன், கதிர்வீச்சுகளின் தாக்கம், ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சைகள் போன்ற காரணத்தினாலும் ஏற்படும்.
நோய் தொற்றுக்கான அறிகுறிகள்
உங்களின் மார்பக பகுதியில் ஒவ்வாரு இடத்திலும் கட்டிகள் வித்தியாசமாக இருத்தல். இந்த கட்டிகள் மென்மையாகவும் வட்டவடிவமாகவும் இருக்கும். இது கட்டிகள் பெரிதாக வளர்ந்தும் காணப்படும்.
அப்படி இல்லை என்றால் கட்டிகள் இல்லாமலும் இந்த அறிகுறிகள் காணப்படும். இதை தவிர மார்புக் காம்புகள் உள்பக்கமாக திரும்புதல் போன்ற அறிகுறி காணப்படுதல்.
பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவதும், பால் ஊறாமல் காம்பிலிருந்து திரவங்கள் வெளியேறுதல், மார்பகங்கள் சிவந்து போதல், செதில்கள் போன்று உருவாதல், மார்பகங்களில் தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
இதனால் உடல் முழுவதும் அதிகமான சோர்வு காணப்படும்.மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இதை தவிர தொண்டை பகுதிகளில் கட்டிகள் தோன்றும். மார்பகத்தில் வளரக்கூடிய கட்டிகள் வலி இருந்தாலும், இல்லையென்றாலும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இதன் சிகிச்சை முறை
இந்த நோய்க்கு சமீப காலங்களில் ஏராளமான சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அந்த வகையில் இதற்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்புப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்குதல்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழிப்பதற்கு இந்த ரேடியேஷன் தெரபி வழங்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயின் நிலையையும் தீவிரத்தையும் பொறுத்து கீமோதெரபியில் ஊசிக்ள மூலமும் மருந்துகள் வாயிலாகவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
40 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையேனும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுய பரிசோதனை செய்வது எப்படி
மார்பகத்தின் அளவு, நிறம் மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். வெளியில் தெரிகிற அளவு வீக்கம், மார்பின் தோல்களில் செதில்கள் போல வருவது, காம்புகளில் ரத்தம் வடிதல், மஞ்சள் நிற திரவம் வடிதல் ஆகியவற்றை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
மார்பின் காம்பு பகுதி வெளிநோக்கி நீட்டி இருக்காமல் உட்புறமாக உள்ளே தள்ளியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நின்ற நிலையில் ஒரு கையை உயர்த்தியபடி மற்றொரு கையால் மார்பகத்தை அழுத்தி ஏதேனும் கட்டிகள் தென்படுகிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.
அதேபோல மற்றொரு மார்பத்தையும் சோதிக்கலாம். உட்கார்ந்த நிலையில் மேலே சொன்னபடி மார்பகங்களை லேசாக அழுத்தி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக படுத்த நிலையில் இதேபோல சோதித்துப் பார்க்க வேண்டும். சோதனை செய்து பார்க்கும்போது கைகளால் கட்டிகள் இருப்பது உணரப்பட்டாலும் அல்லது வலி இருந்தாலும் மருத்துவரை அணுகி முறையான சோதனை செய்து கொள்வது நல்லது.