வவுனியா, நெளுக்குளம் தோட்டக் கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை (6) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அதேசமயம் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தவறி விழுந்தாரா, அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.