பதவி விலகினார் நாமல்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சர்வதேச தொடர்புகள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இன்று (06) நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 09.30க்கு கூடியது.

வெற்றிடத்திற்கு நியமனம்
சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை அவரது வெற்றிடத்திற்கு பிரேமநாத் சி தொலவத்த (Premnath C. Dolawaththa) நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.