கிராமத்து பாணியில் மட்டன் குழம்பு!

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் மட்டன் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக அசைவ சமையல் என்றாலே கிராமத்து முறை தான் முதலிடம் வகிக்கின்றது.

கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து மட்டன் குழம்பு செய்தால் பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். மட்டன் குழம்பு வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை மட்டுமில்லாமல் மூளை வளர்ச்சியையும் அதிகரிக்க உதவுகின்றது.

கிராமத்து பாணியில் அவைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமாக சுவையில் எவ்வாறு மட்டன் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
ஆட்டுக்கறி

தக்காளி (பொடியாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிய)

காய்ந்த மிளகாய்

எண்ணெய்

சோம்பு

உப்பு

பூண்டு

ஏலக்காய்

தேங்காய்

மஞ்சள் தூள்

பட்டை

லவங்கம்

கசகசா

மிளகு

தனியா

கருவேப்பிலை

கொத்தமல்லி இலை

கடுகு

சீரகம்

உளுந்து

கடலைப் பருப்பு

செய்முறை
முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மண் சட்டி அடுப்பில் வைத்து, சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக வேக வைத்து இறக்கிக்கொள்ள வேண்டும்.

அதனைடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வேறாக இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின்னர் முன்பு வேகவைத்த ஆட்டுக் கறி தண்ணீரை, தக்காளியுடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் வகையில் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதித்த பின்னர் இறுதியாக எண்ணெய்யில் வறுத்த கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் கிராமத்து ஸ்டைலில் ஆரோக்கியம் நிறைந்த மட்டன் குழம்பு தாயார்.