சந்தானத்துடன் ஜோடி சேரும் விஜய் பட நாயகி

சந்தானம்
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் இங்க நான் தான் கிங்கு ஆகிய இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

கடந்த ஆண்டு சந்தானம் நடித்து வெளிவந்த DD Returns திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என தகவல் வெளிவந்தது.

DD Returns 2
இந்த நிலையில், இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. நடிகர் ஆர்யா தான் இப்படத்தை தயாரிக்கிறாராம்.

இளம் நடிகையாக ரசிகர்ளின் மனதை கொள்ளைகொண்டுள்ள நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மகேஷ் பாபு, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.