விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் பிரபலம் சந்தன் செட்டி- நிவேதிதா தம்பதிகள் இருவரும் விவாகரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விவாகரத்து

சமீப காலமாக பல பிரபலங்கள் தங்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த வருடம் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்தை அறிவித்த நிலையில், இந்த வருடம் ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி விவாகரத்தை அறிவித்துள்ளனர்.

இந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பன்முக திறமையாளராக விளங்கும் சந்தன் செட்டி மற்றும் அவருடைய மனைவி நடிகை நிவேதிதாவை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தன் செட்டி- நிவேதிதா

சந்தன் செட்டி, கன்னட திரையுலகில் பிரபலமான இளம் நடிகராக இருந்து வருகிறார். அத்துடன் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர், என பன்முக திறமையோடு வலம் வருகிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 5 கன்னட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார்.

இவ்வளவு பிரபலமாக இருக்கும் சந்தன் செட்டி கடந்த 2020-ஆம் ஆண்டு நிவேதிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து 4 வருடங்களாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்த பிரபலங்கள் தற்போது பிரியப்போவதாக அறிவித்துள்ளனர்.