தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் பெற்ற நடிகர்!

ரஜினி-விஜய்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக கொண்டாடப்படுபவர்கள் ரஜினி, விஜய், அஜித். அதிலும் பாக்ஸ் ஆபிஸ் என்று வந்துவிட்டால் டாப்பில் ரஜினி மற்றும் விஜய்யின் படங்கள் தான் இருக்கும்.

ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் டாப் பாக்ஸ் ஆபிஸ் படங்களின் லிஸ்ட் மாறிக்கொண்டே வரும்.

ஆனால் இப்போது இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இருந்து விஜய் வெளியேற இருப்பதை நினைக்கும் போது தான் எல்லோருக்குமே வருத்தமாக உள்ளது.

தற்போது ரஜினி வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் கோட் படத்தின் வேலைகளில் உள்ளார்.

அஜித், விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடிக்கிறார்.

இந்த வருடம் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

முதல் நடிகர்
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஜினி, விஜய் தான் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களை தாண்டி ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.

தயாரிப்பாளராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவராக மாறினார். இவர் கடந்த 1996ம் ஆண்டு கே.வி. பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் படத்துக்காக தான் முதன்முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார்.