இப்போது குண்டாக இருக்கும் தாமு இளவயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?

செப் தாமு
இந்தியாவில் இருக்கும் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவர் தான் தாமு என்கிற கோதண்டராமன் தாமதோரன்.

40 வருடங்களுக்கும் அதிகமாக உணவு வழங்கல் துறையில் அனுபவம் பெற்றிருக்கும் தாமு 20 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

இப்படி சமையலில் பல சாதனைகளை செய்துள்ள தாமு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

வைரல் போட்டோ
இப்போது குக் வித் கோமாளி அடுத்த சீசனிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். தாமு இடம்பெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் செப் தாமு தான் இளம் வயதில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இப்போது குண்டாக இருக்கும் தாமு இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க,

 

View this post on Instagram

 

A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)