சதிவலையில் சிக்குவாரா முத்து வெளியாகிய ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது வீட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருமகள்கள் ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோரின் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடைபெற இருக்கிறது.

அதில் முத்துவுக்கு எதிராக பெரிய சதி திட்டம் ஒன்றை போடுகிறார் ரோகிணி. முத்துவை குடிக்கவைத்து எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என துடிக்கிறார்.

சதி திட்டம்
முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு பேரை அந்த விழாவுக்கு வர வைக்கிறார் ஸ்ருதியின் அம்மா. முத்து கோபத்தில் எதாவது செய்தால் அதை வைத்து ஸ்ருதியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகிறார் அவர் அம்மா.

முத்து இதில் சிக்குவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ப்ரோமோ இதோ..