முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் இன்று (2024.03.14) மறுத்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிணை மனுக்கள் இன்று (14) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.