இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

மார்ச் மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 67,114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையில் ரஸ்யாவில் இருந்து 9783 பேரும், இந்தியாவில் இருந்து 9735 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆறாயிரத்து 301 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை , ரஸ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.