விஜய் டீவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை

கிழக்கு வாசல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல்.

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது தொடர்.

புதிய என்ட்ரி
எம்.என்.மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில் நடித்துள்ளார்.