வாலி ரீரிலீஸ் பற்றி பேசிய SJ சூர்யா!

பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது தற்போது ட்ரென்ட் ஆகி வருகிறது. அஜித் நடித்த வாலி படம் தற்போது தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆகி இருக்கிறது.

வெளிவந்து 24 ஆண்டுகள் ஆன நிலையிலும் படத்தை மீண்டும் தியேட்டர்களில் பார்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

புது படத்தை போல..
இந்நிலையில் வாலி படத்தை இயக்கிய SJ சூர்யாவை பாராட்டி சிம்ரன் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு பதில் கொடுத்திருக்கும் SJ சூர்யா அஜித் மற்றும் சிம்ரன் இரண்டு பேரின் நடிப்பையும் பாராட்டி இருக்கிறார்.

மேலும் புது படம் போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார்.

அவரது பதிவு இதோ..