பிறந்ததும் தத்துக் கொடுக்கப்பட்ட பிரபலம்!

பிரபல நடிகர் அரவிந்த் சாமி பிறந்தவுடன் தத்துக் கொடுத்துவிட்டதாக நடிகர் டெல்லி குமார் கூறியுள்ளார்.

நடிகர் அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, ரோஜா, பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தினை பிடித்தார்.

சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகி இருந்த இவர், தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். இப்படத்தில் வில்லனாக களமிறங்கி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

இவரது தந்தை பிரபல நடிகர் டெல்லி குமார் தானாம். இவர் அரவிந்த் சாமி தத்து கொடுக்கப்பட்டதைக் குறித்து பேசியுள்ளார்.

தத்துகொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி
அதாவது அரவிந்த் சாமி பிறந்த உடனேயே, டெல்லி குமார் அவரது அக்காவிற்கு அவரை தத்து கொடுத்துவிட்டதாகவும், பிறந்தது முதல் அங்கே வளர்ந்து வருவதால் பெரிதாக எதிலும் கலந்து கொள்வதில்லை.

ஆனால் வீட்டில் விசேஷம் என்றால் மட்டும் அரவிந்த் சாமி வந்துவிட்டு செல்வதாக அவரது தந்தையும், பிரபல நடிகரும் டெல்லி குமார் கூறியுள்ளார்.