லவ்வர் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.

மணிகண்டன்
வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். விஜய் டிவியில் மிமிக்கிரி கலைஞராக தனது பயணத்தை துவங்கிய மணிகண்டன் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளார்.

ஜெய் பீம் படத்தின் மூலம் உணர்ச்சிவசமான நடிப்பு வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இதன்பின் குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தார்.

லவ்வர் வசூல்
மேலும் தற்போது மணிகண்டன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் லவ்வர். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபு ராம் வியாஸ் என்பவர் இயக்கியிருந்தார்.

கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகளவில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 2.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.