சமையலில் உப்பு அதிகமாயிருச்சா? இதை செய்யுங்க

பொதுவாக நாம் சமைக்கும் போது எத்தனை சுவையூட்டிகளை சேர்த்தாலும் உப்பு சேர்த்ததன் பின்னர் தான் அந்த உணவு முழுமையடைகின்றது.

உப்பு இல்லா பண்டம் குப்பையில் என்பார்கள் உப்பு இல்லாவிட்டால் கூட சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில் சமையலின் போது உப்பு அதிகமாகிவிடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் உணவை வீணாக்க நேரிடும்.

இந்த கவலை இனி வேண்டாம் சமையலில் தவறுதலாக உப்பு அதிகமாகிவிட்டால் அதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உப்பை சமநிலைப்படுத்துவது எப்படி?
குழம்பு வகைகளில் உப்பு அதிகமாக இருந்தால், அதில் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை வெட்டி சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் உப்பு சரியாகிவிடும்.

அல்லது உப்பு அதிகமான குழம்பில் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு சுமார் 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் அந்த உருளைக்கிழங்கை வெளியில் எடுத்துவிட்டால் உப்பு சமநிலைக்கு வந்துவிடும்.

வறுவல்களில் உப்பு அதிகமாகிவிட்டால் கோதுமை மாவு அல்லது கடலை மாவு உருண்டைகளை உருட்டி அதில் போட்டு 10 தொடக்கம் 20 நிமிடங்களின் பின்னர் அந்த உருண்டைகளை எடுத்துவிட்டால் உப்பு சமநிலையாகிவிடும்.

வறுவல்களில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது முட்டை சேர்த்து கிளறிவிடலாம், இதனால் உப்பு சரியாகிவிடுவதுடன் உணவின் சுவையையும் அதிகரிக்க முடியும்.

இந்திய, முகலாய், சைனீஸ் உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால், எலுமிச்சையை பயன்படுத்தலாம்.

இதற்கு சாதத்தில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது அதிக உப்பை உறிஞ்சு சமநிலைப்படுத்திவிடும்.

காய்கறியில் உப்பு அதிகமாக இருந்தால், அதனுடன் 1 தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம். சேர்த்த பின்னர் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும். இதனால் உப்பை சரிசெய்துவிடலாம்.

பருப்பு அல்லது காய்கறியில் உப்பு அதிகமாக இருந்தால், வேகவைத்த 2 முதல் 3 உருளைக்கிழங்கை சேர்க்கவும். இது கூடுதல் உப்பை உறிஞ்சிவிடும்.

உப்புத்தன்மையை குறைக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம். சர்க்கரை உணவில் உள்ள உப்புத்தன்மையை சமன்நிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தக்காளியை மிக்சியில் அரைத்து குழம்பில் சேர்த்து கொதிக்க வைக்கலாம் அல்லது தக்காளியை துண்டுகளாகவும் சேர்க்கலாம் அதுவும் குழம்பில் அதிகமான உப்பை சரிசெய்துவிடும்