பதுளை ஹொப்டன் வீதி தாளிறங்கியதால் சிரமப்படும் மக்கள்

பதுளை – லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சிரமப்படும் கிராம மக்கள்
தங்களது கிராமங்களுக்குச் செல்ல மாற்றுப் பாதையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக இந்த பாதை தாழிறங்கி காணப்படுவதால் அந்த வீதியில் பயணிப்பது ஆபத்தாக உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.