4 நாட்களில் வசூலை அள்ளிக் குவித்த அயலான் திரைப்படம்!

அயலான்
சிவகார்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் பொங்கல் முன்னிட்டு கடந்த 12 -ம் தேதி வெளியானது.

இப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

வசூல்
தற்போது அயலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருப்பதால் படத்தை பார்க்க குடும்ப ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்நிலையில் அயலான் படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது . அதில் இப்படம் 4 நாட்களில் ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.