வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரணம்!

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனாபொல கங்கனமல பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய ககனா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
மேலும், உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் தனது வீட்டில் இறப்பர் பட்டி ஒன்றை இரும்பு ஒன்றில் கட்டி சுழற்றியதாகவும், பின்னர் அந்த இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதாக பொத்துப்பிட்டிய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.