அமலாபால்
தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு வீரசேகரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால்.
அதன்பின் சிந்து சமவெளி, மைனா என நடிக்க இப்படம் அவருக்கு திரைப்பயணத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த படமாக அமைந்தது.
அதன்பின் சிறந்த கதைக்களம் கொண்ட படங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
டாப் நாயகியாக வலம் வந்த போது இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்ய பின் சில காரணங்களால் சில வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்தார்.
திருமண பிரச்சனைகளுக்கு பிறகு நடிகை அமலாபாலின் திரைப்பயணம் சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
வைரல் பதிவு
கடந்த ஆண்டு அமலாபால் ஜெகத் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தனர்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாவில், இப்போது தான் மட்டுமல்ல தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் அமலா.
இதோ அவரது பதிவு,
View this post on Instagram