வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மனைவி விபரீத முடிவெடுத்த கணவன்!

கிண்ணியா – ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

சம்பவத்தில் பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரே உயிர் இழந்துள்ளார்.

மனைவியுடன் கருத்து முரண்பாடு
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். மனைவி நாட்டுக்கு வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார். இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன் இன்று (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.