தூங்கும் போது பாடல் கேட்பவரா நீங்கள் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாகவே மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமாக விடயமாகும். அது மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக சிலர் பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அதுவும் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம். ஒரு நாளைக்கு எந்த பொறுத்து தான் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் சரியாக வேலை செய்யும்.

அந்த வகையில் தூக்கத்தை வரவழைக்க சிலர் பாடல்கள் கேட்பதுண்டு. இரவில் பாடல் கேட்க்கும் போது குறிப்பாக மெல்லிசை பாடல்களை கேட்டும் பொழுது மனதில் உள்ள கவலைகள் யாவும் மறந்து மனது லேசாக இருக்கும்.

தூங்குவதற்கு முன்பு பாடல்கள் கேட்பதில் நல்லது இருந்தாலும் சில கெடுதல்களும் உள்ளது. தீமைகள் இரவில் ஹெட்செட் மாட்டி கொண்டு தூங்குவதற்கு முன்பாக பாடலை கேட்டுக் கொண்டு தூங்கும் போது அது உங்களுடைய சிறந்த தூக்கத்தை நிச்சயம் பாதிக்கும்.

பாட்டு கேட்கமால் தூங்க முயற்சித்தால் உங்களால் தூங்க முடியாது. அதேபோல் இரவு நேரத்தில் மொபைல் போனை பக்கத்தில் வைத்து பாட்டு கேட்பதால் நம்முடைய மூளை எப்போதும் செயல்பட்டு கொண்டு இருக்கும் சூழல் ஏற்படும்.

மூளைக்கு தேவையான ஓய்வுகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இருப்பதால் காது பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அது நம்முடைய காதுகளில் சில கோளாறு ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

என்னதான் பாடல்களை கேட்டு தூக்கத்தை வர வைத்தாலும் இயற்கையாக தூக்கம் வருவது தான் உண்மையில் சிறந்தததாக இருக்கும்.