விஜய் மீது செருப்பு வீசியது குறித்து விஷால் வெளியிட்டுள்ள கருத்து!

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையே உலுக்கியது. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்ச கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

விஜய் மீது செருப்பு வீச்சு
திரையுலகை சேர்ந்த விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் விஜய் கூட்ட நெரிசல் என்று கூட நினைக்காமல் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பினார்.

அவர் காருக்குள் ஏறும் போது திடீரென எங்கிருந்தோ செருப்பு ஒன்று வீசப்பட்டது. இதை பலரும் கண்டித்தனர். துக்கத்தில் பங்கெடுக்க வந்த நபர் மீது இப்படி செய்வது என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

விஷால் அதிரடி கருத்து
இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த விஷால், ‘திரையுலகம் முன்னேற உதவியாக இருந்த நபருக்கும், தன்னுடைய கலை வாழ்க்கைக்கு உதவிய நபருக்கு அஞ்சலி செலுத்த தான் விஜய் வந்தார். அவர் மீது இப்படி நடந்தது என்பது தவறான விஷயம் தான். ஆனால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் இந்த மாதிரியான விஷயங்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம்’ என கருத்தை கூறினார் விஷால்.