பிரம்மாண்டமாக உருவாகும் விஷ்ணு விஷாலின் அடுத்த படம்

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் உடன் தான் அவர் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

படம் பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வந்திருக்கிறது. இந்தியா முழுவது நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்கள் பற்றி தான் இந்த படத்தின் கதை இருக்குமாம்.

8 ஸ்டேட்களில் ஷூட்டிங்
பல மாநிலங்களில் நடப்பது போல் கதை இருக்கும் என்பதால் மொத்தம் 8 மாநிலங்களில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர்.

நாகலாந்து, லடாக் பனி பிரதேசத்திலும் ஷூட்டிங் நடத்த இருக்கிறாராம். அதற்காக தான் அதிகம் ஃபிட் ஆக இருக்கும் விஷ்ணு விஷாலை இயக்குனர் கோகுல் தேர்வு செய்தாராம்.