பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்!

பிக் பாஸ் 7
85 நாட்களை பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இதில் யார் அந்த வெற்றி கோப்பையை கைப்பற்ற போகிறார் என ஆர்வத்துடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் விக்ரம் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, விசித்ரா, விஜய், மாயா, பூர்ணிமா, தினேஷ், மணி, ரவீனா, நிக்சன் என மீதம் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

டைட்டில் வின்னர் இவரா
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பேச்சு எழுந்துவிட்டது. இன்னும் மூன்று வாரங்களே மீதம் இருக்கும் நிலையில், டைட்டில் வின்னராக போகிறவர் இவராக தான் இருக்க முடியும் என தங்களுடைய கணிப்புகளை கூறி வருகிறார்கள்.

அதன்படி, தற்போதைய நிலைமையில் அர்ச்சனா தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருப்பார் என ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் சிலர் மற்ற சில போட்டியாளர்களின் பெயரை குறிப்பிட்டு கூறினாலும் கூட, அர்ச்சனா தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என பெரும்பான்மையான ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இறுதி கட்டத்தில் என்ன நடக்க போகிறது என்று.