சருமத்தை இளமையாகவே வைத்திருக்க உதவும் கொய்யா

இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் பொரும் பங்கு வகிக்கின்றது.

கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

கொய்யாவின் நன்மைகள்
அதிக வைட்டமின் சி இருப்பதால், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயற்பட்டு உடலை பாதுகாக்கிறது. மேலும் கொய்யாப்பழம் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் பார்த்து கொள்கிறது.

கொய்யா பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கலோரி, உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவுகளாக உள்ளது.

கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இவை சாப்பிடும் உணவை எளிதில் மென்மையாக்கி செரிமானத்திற்கு உதவுகிறது, இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் குறைக்கிறது.

மேலும், கொய்யா இலை சாறு வயிற்றுப்போக்கின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி போன்ற செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் கொய்யா சேர்த்துக்கொள்வது நல்லது.

கொய்யா இலைச் சாற்றில் உள்ள ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள், கருப்பையின் மென்மையான தசைகளில் உள்ள பிடிப்பை எளிதாக்குகிறது, இது வலி நிவாரணிகளை விட மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள உணவாக அமைகிறது.

கொய்யாப்பழத்தில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது.

மேலும் உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கொய்யா புற்றுநோய், இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும் வாய்ப்பை குறைகிறது.

பழுத்த கொய்யாப்பழத்தில் அதிக வைட்டமின் சி உள்ளது. இதய ஆரோக்கியம் கொய்யா இலைகளில் அதிக பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன.

அவை இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன, இது இதய செயலிழப்புக்கான முதன்மை காரணியாகும், மேலும் கொய்யா இது ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகிறது.

கொய்யாப்பழம் ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும், அவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன மற்றும் தேவையற்ற செல் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூல நோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.