தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா?

பொதுவாக தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.

இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு அரசு தடை விதித்தாலும் ஒரு சில இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை தான் சமையலுக்கு கூட பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

பள்ளி செல்லும் சிறுவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், வெளியில் செல்லும் பெரியவர்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம்.

மேலும் பிளாஸ்டிக் பாவணை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் பிளாஸ்டிக் பாவணையால் உடலில் அப்படி என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பாவணை

1. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதால் நீரிழிவு நோய், உடல் பருமன், சிறுவயதிலே பருவமடைதல், கருவுறுதலில் பிரச்சனை போன்ற பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.

2. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிளாஸ்டிக் பொருட்களின் பாவணை தான்.

3. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி வெளியில் கொண்டு செல்லும் போது சூரிய ஒளியின் தாக்கத்தினால் டையாக்சின் என்ற நச்சுப்பொருள் தண்ணீரில் கலந்து விடுகிறது. இத்தண்ணீரை நாம் பருகினால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

4. பிளாஸ்டிக்கில் பித்தலேட் என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

5. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்களுக்கு அதிகமான பிரச்சினைகள் எழக்கூடும். ஆகவே பிளாஸ்டிக் பாவணையை ஆண்கள் குறைப்பது நல்லது.