மாதம்பட்டி ரங்கராஜின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?

மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் துறையின் மூலம் பிரபலமாவர் மாதம்பட்டி ரங்கராஜ். தனது குடும்ப தொழிலாளான சமையல் துறையில் தற்போது சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

இதன்பின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் நேரடியாக வெளிவந்த பென்குயின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக நட்சத்திரங்கள் முதல் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்து கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜின் சகோதரர்
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா – உமாபதி திருமணத்தின் போது தம்பி ராமையாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவர் சகோதரர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாதம்பட்டி ரங்கராஜின் சகோதரரை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் twins போல் இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..